January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் கடற்றொழில் அமைச்சுக்கு முன்னால் மீனவர்கள் போராட்டம்!

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி கொழும்பில் கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடக்கில் தமது கடலுக்கு அத்துமீறும் இந்தியப் படகுகள் மீன் வளத்தை அழிப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

தமது பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, அமைச்சரை சந்திப்பதற்கான மீனவ சங்கத்தை சேர்ந்த 5 பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.