January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேசத்துடன் எவ்வாறு செயற்பட வேண்டும்?: அரசாங்கத்திற்கு யோசனை கூறும் சாணக்கியன்!

சர்வதேசத்துடன் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்று தங்களை பார்த்த கற்றுக்கொள்ளுங்கள் என்று இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி, அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேசத்துடன் ஒன்றித்து பயணித்தால் மட்டுமே முன்னேற்றகரமான நாட்டை கட்டியெழுப்ப முடியும். இதனால் சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீதியமைச்சர் அலி சப்ரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் சர்வதேசத்துடன் ஒன்றித்து செயற்பட முடியும் என்றோ, ஐநாவுக்கு பதிலளிக்க முடியுமென்றோ அரசாங்கம் எண்ணக் கூடாது என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத சட்டத்தை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கையெழுத்து போராட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தச் சட்டமானது எதிர்க்காலத்தில் நிச்சயமாக சிங்கள மக்களையும் பாதிக்கும் என்றும், அப்போது அந்த மக்கள் அதன் ஆபத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.