April 17, 2025 15:44:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மண்மேடு சரிந்து மூவர் மரணம்: கண்டியில் சம்பவம்!

கண்டி, வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீடொன்றுக்கு அருகில் புதிய கட்டடமொன்றுக்காக தளம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவ்விடத்தில் இருந்த நால்வர் மண்ணுள் புதையுண்டதாகவும் அவர்களில் ஒருவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்டுள்ள நபர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.