May 4, 2025 11:17:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு இஸ்ரேல் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!

சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய முகவரமைப்பின் ஊடாக இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தொடர்பான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.

சுவாசக் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நாடித் துடிப்பு அளவீட்டு கருவிகள் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக இஸ்ரேல் வழங்கி வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் இஸ்ரேல் அரசாங்கத்தின் நன்கொடை கையளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியத் தூதுவர் நவோர் கிலோன் இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் கையளித்துள்ளார்.

”இலங்கையும் இஸ்ரேலும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டுள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் ஏற்பட்டத்தில் இருந்து, இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு பெறுமதி வாய்ந்த உதவிகளை வழங்கியுள்ளது” என வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.