May 28, 2025 13:52:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

இன்று முற்பகல் புது டெல்லியின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இலங்கையை பலப்படுத்தும் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.