May 4, 2025 9:30:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முழுவதும் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

File Photo

இலங்கை முழுவதும் அரச மருத்துவமனைகளில் தாதிமார் உள்ளிட்ட சுகாதார துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டாளரான சமன் ரட்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார துறையை சேர்ந்த 17 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாத காலமாக அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்றும், இதனால் தீர்வு கிடைக்கும் வரையில் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை தொடருவோம் என்றும் சமன் ரட்னப்பிரிய தெரிவித்துள்ளார்.