எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பெப்ரவரி 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் இலங்கையிலுள்ள லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 7 ரூபாவினாலும், 95 ரக பெட்ரோலின் விலை 3 ரூபாவினாலும் மற்றும் ஒடோ டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கமைய ஒரு லீட்டர் 92 ரக பெட்ரோலின் விலை 177 ரூபாவுக்கும், 95 ரக பெட்ரோலின் விலை 213 ரூபாவுக்கும் மற்றும் ஒடோ டிசல் 124 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என்று லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.