இலங்கையில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாக பேணுமாறு மருத்துவர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது நாட்டில் தினசரி கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தேவை ஏற்பட்டால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.