January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணம்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெப்ரவரி 6 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே அமைச்சர் அங்கு பயணமாகவுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் அமைச்சர் பீரிஸ், உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவை மேலும் விரிவுபடுத்துதல் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தொற்று நிலைக்கு மத்தியில் இரு நாடுகளிடையேயும் தொழிலுக்காக ஊழியர்களை வரவழைத்தல், கல்வி நடவடிக்கைகளுக்காக புலமைப்பரிசில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.