முழுமையான கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு அனுமதிப்பதை தடை செய்து சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இந்த அறிவித்தல் நடைமுறைக்கு வருமென்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொதுப் போக்குவரத்து சேவைகள், பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முறையாக பேண வேண்டும் என்றும், அதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.