இலங்கையின் 74 ஆவது சுதந்திரதினமான இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு கண்காணிப்பு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்றதாக கூறப்படும் கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாக சிறீதரன் எம்பி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்ற கட்டளைக்கு முரணாக நடைபெற்றுவரும் வேலைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவது பற்றி ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.