January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினமான இன்று, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய நாளை கரிநாளாக அறிவித்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய காணாமல் போனோரின் உறவினர்கள், ”சர்வதேசமே நீதி விசாரணையை நடத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, இலங்கைக்கு சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியாவறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.