May 24, 2025 17:42:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளருக்கு கொரோனா; நாடாளுமன்றச் செய்தியாளர்களை சுயதனிமைப்படுத்த வேண்டுகோள்

நாடாளுமன்றத்தில் கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சண்டே ரைம்ஸ்’ ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அன்று நாடாளுமன்றத்துக்கு வந்த அனைத்து ஊடகவியலாளர்களையும் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அரச தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.