File Photo
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 197 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மஹர சிறைச்சாலையில் இருந்து 20 பேரும், கேகாலை சிறைச்சாலையில் இருந்து 18 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 17 பேரும், களுத்துறை சிறைச்சாலையில் இருந்து 13 பேரும், போகம்பரை சிறைச்சாலையில் இருந்து 11 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 11 பேரும், வாரியபொல சிறைச்சாலையில் இருந்து 10 பேரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.