January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் அருந்திக்க!

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தனது மகன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் நிலையிலேயே அருந்திக்க பெர்ணான்டோ பதவி விலகல் தொடர்பில் கூறியுள்ளார்.

மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருந்திக்கவின் மகன் நேற்று ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கைதான அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.