ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி. மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளளது.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் உள்ளிட்ட குழுவினர் நேற்று, யாழ். மாநகர முதல்வரை சந்தித்துள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் இ. த. ஜெயசீலனும் கலந்துகொண்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் எங்களுடைய பொருளாதாரவளம், கல்வி பண்பாடுகள் கலாச்சாரம் போன்ற எங்களுடைய அப்டிபடைகள் அழிக்கப்படுகின்றன என்று மாநகர முதல்வர், ஐநா வதிப்பிடப் பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதும் எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கு பகுதியில் பல நூற்றுக்காணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இராணுவம் கடற்படை விமானப்படை என தங்களுடைய படைத்தேவைகளுக்காக அபரிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பிலும் மாநகர முதல்வர் மணிவண்ணன் எடுத்துக் கூறியுள்ளார்.
இதேவேளை ஐநா வதிவிடப் பிரிதிநிதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள மாநகர முதல்வர், இனஅழிப்புகளுக்கு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், சுயநிர்ணய உரிமை அங்கீகிக்கப்பட்ட எமக்கான அரசியல் தீர்வை பெற ஐநா உதவ வேண்டும் என்றும், திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற பொருளாதார கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கு எமது மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.