File Photo
‘கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்’ என்ற திட்டம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக 14,021 கிராம சேவகர் பிரிவுகளில் இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளங் காணக்கூடிய செயன்முறையை இந்தத் திட்டத்தின் ஊடாக செயற்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதன்படி இந்த திட்டத்தை பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய இன்று முதல் நிதி அமைச்சர் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.