
பெப்ரவரி 7ஆம் திகதி முதல் அனைத்து அரசளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கமைய அந்தப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.