இலங்கையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு மேலதிகமாக புதிய வகை வைரஸ் காய்ச்சலொன்று பரவி வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல்மாகாணம் போன்ற அதிக நெரிசலை கொண்ட பகுதிகளிலேயே அதிகளவிலானவர்கள் புதிய காய்ச்சலால் பீடிக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனால் இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதுடன், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுமாறு சுகாதார பரிசோதகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் கட்டுமானப் பணியிடங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படுவதாகவும் அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.