January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் தவிர்ந்த மற்றைய பாடசாலைகளுக்கு பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் மார்ச் 6 ஆம் திகதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏதேனும் ஆரம்பப் பிரிவு பாடசாலை உயர்தரப் பரீட்சை கடமையுடன் தொடர்புபடுமாக இருந்தால் வலய கல்வி பணிப்பாளர்களின் அனுமதியுடன் அந்தப் பாடசாலைக்கு விடுமுறை வழங்கலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் இந்தப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.