2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் திவிநெகும நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தி நாட்காட்டிகளை அச்சிட்டதாக தெரிவித்து தொடரப்பட்டிருந்த வழக்கில் இருந்து அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் திவிநேக அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் 29.4 மில்லியன் ரூபா நிதியை மோசடியான வகையில் கையாண்டதாக தெரிவித்து இவர்கள் மீது கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.
இதன்போது வழக்கின் சந்தேக நபர்களான பஸில் ராஜபக்ஷ மற்றும் கித்சிறி ரணவக்க ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையினால் அவர்களை விடுதலை செய்வதாக நீதி மன்றம் அறிவித்துள்ளது.