இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 40,000 மெட்ரிக் டொன் டீசலும் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் பெட்ரோலும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக எரிசக்தி அமைச்சு குறித்த கம்பனியுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
அதற்கமைய, குறித்த தொகை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.