January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், வகுப்புகளுக்குத் தடை!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து அதனுடன் தொடர்புடைய கலந்துரையாடல்களுக்கு தடைவிதிக்கும் சட்டத்திற்கு அமையவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த தடை உத்தரவை மீறி மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், ஒன்றுகூடல்கள் என்பன நடத்தப்படுமாக இருந்தால் அது தொடர்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.