File Photo
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆலுவலகத்திற்கு அனுப்புவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கையொன்று தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மார்ச் மாதத்தில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆலுவலகத்தை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்து வருவதாகவும், அந்தத் கடிதத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கையெழுத்துடன் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-(3)