ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் கலடியஹேன பிரதேசத்தில் நேற்று மாலை, தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த போதே அனுரகுமாரவின் வாகனம் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது அவ்விடத்தில் இருந்தவர்களினால் இரண்டு பேரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஐயாயிரம் ரூபா பணத்திற்காக, அரசியல்வாதிகள் சிலரின் கோரிக்கைக்கு அமைய இந்த செயற்பாட்டை முன்னெடுத்ததாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பதாக சந்தேகநபர்கள் தெரிவித்ததாக ஜே.வி.பி தொழிற்சங்க முக்கியஸ்தரான மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.