யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகவே மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. அதேபோன்றே பலாலி விமான நிலையமும் மூடப்பட்டன. இதனை தவிர வேறு எந்த அரசியல் காரணிகளும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையம் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக விமான போக்குவரத்தில் தாமதங்கள் காணப்படுவதாகவும், விரைவில் விமான சேவைகள் வழமைப் போன்று ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.