January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”13 ஜ நிராகரிப்போம்”: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் பேரணி!

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டது.

‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

நல்லூர் ஆலய முன்றலில் இருந்து கிட்டுப் பூங்கா வரையில் பேரணி நடத்தப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பேரணியை முன்னெடுத்தனர்.

கடந்த 34 வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க்கட்சிகளால் கோரப்பட்டுள்ளது.

இச் செயற்பாடு தமிழ்மக்களது அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதிமுயற்சியாகும். இச் சதிமுயற்சியை முறியடிக்கவும், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயமுள்ள சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியே இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.