January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற நால்வர் மரணம்: ஒருவரை காணவில்லை

File Photo

இலங்கையின் பண்டாரவளை – எட்டம்பிட்டிய பகுதியிலுள்ள கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு காலியில் இருந்து சுற்றுலா சென்றிருந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நீர்வீழ்ச்சிப் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது அவர்கள் நீரால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடி மீட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.