பேலியகொடவில் இன்று பகல் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு, பொலிஸ் நிலையம் திரும்பிய பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீரென உயிரிழந்துள்ளார்.
நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய குறித்த பொலிஸ் அதிகாரி திடீரென சுகயீனமுற்ற நிலையில், அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.
பேலியகொட பிரதேசம் கொரோனா கொத்தணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மாதிரி பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.