
இலங்கையில் மேலும் 82 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிப்பு ஆய்வு மற்றும் மரபணு பரிசோதனை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையின் போதே அவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 283 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இதன்படி இலங்கைகயில் ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
Our latest report https://t.co/WCK2HjFTjd
— Chandima Jeewandara (@chandi2012) January 29, 2022