May 3, 2025 14:03:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு கொவிட் தொற்று உறுதி!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை கடந்த தினங்களில் அவருடன் நெருக்கமாக தொடர்புகளை பேணியவர்களிடம் கொவிட் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.