January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு மீண்டும் முடக்கப்படுமா?: சுகாதாரப் பிரிவு பதில்!

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் நிலைமையில் மீண்டும் நாடு முடக்கப்படுவதை நினைத்தும் பார்க்கமுடியாது எனவும், அவ்வாறு முடக்கினால் மக்களின் வாழ்வாதரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்வது அவசிமாகும் என்றும் அதன்மூலம் தொற்று ஆபத்துகளை தவிரத்துக்கொள்ள முடியும் என்றும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த வாரங்களில் நாளாந்தம் 600 முதல் 800 வரையான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.