கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இம்முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு கொவிட் தொற்றை தடுப்பதற்கான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதென கச்சதீவு ஆலய அருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை இந்திய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், இலங்கையை சேர்ந்தோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.