துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கௌசோக்லு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இன்று காலை அவர் துருக்கியில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாரசூரிய வரவேற்றுள்ளார்.
இதன்போது இலங்கைக்கான துருக்கிய தூதுவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக் குழுவொன்றும் வந்துள்ள நிலையில் இவர்கள் கொழும்பில் இன்று மாலை வரையில் தங்கியிருப்பர்.
இந்தக் காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்களை இவர்கள் சந்திக்கவுள்ளனர்.
İkili ilişkilerimizi ele almak ve temaslarda bulunmak üzere altı yıl sonra tekrar #SriLanka’dayız.
In Sri Lanka after six years to discuss our relations and hold bilaterals.🇹🇷🇱🇰 pic.twitter.com/xpo52f51GV
— Mevlüt Çavuşoğlu (@MevlutCavusoglu) January 28, 2022