May 24, 2025 23:15:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் நாளாந்தம் 2 ஆயிரம் வரையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் ஊடகங்களில் ஊடாக இந்த தகவல்கள் வெளியாகுவதில்லை என்றும், நாட்டில் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவுகின்றது என்றும் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே இருந்த பல சிகிச்சை மையங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் நோயாளர்கள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்தால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் நாளாந்த புள்ளி விபரத் தகவல்களில் நாளாந்தம் 800 முதல் 900 வரையிலான எண்ணிக்கையிலானோ நோயாளர்கள் தொடர்பான தகவல்களே வெளியாகின்றதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.