இந்தியாவின் 73வது குடியரசு தின நிகழ்வு கொழும்பில் உள்ளன இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இந்திய உயர்ஸ்தானிகர் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.
இந்திய ஜனாதிபதியின் செய்தியின் முக்கிய குறிப்புக்களும் உயர்ஸ்தானிகரால் இதன்போது வாசிக்கப்பட்டது.
இதேவேளை அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களும் கண்டியிலுள்ள துணை உயர்ஸ்தானிகராலயமும் இந்தியாவின் 73வது குடியரசு தின நிகழ்வுகளை நடத்தின.