இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினான்டோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடியால் மின்சார உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சார சபை தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே அவர் பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளார்.
இதன்படி பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தான் பதவி விலகவுள்ளதாக அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து குறிப்பிட்டுள்ளார்.