May 28, 2025 12:56:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நீதிக்கான அணுகல்’: வடக்கில் நடமாடும் சேவை!

நீதி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண மக்களை தெளிவுப்படுத்தும் நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

ஜனவரி 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இந்த நடமாடும் சேவையை நடத்தவுள்ளதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

‘நீதிக்கான அணுகல்’ என்ற தொனிப்பொருளில் வவுனினா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் சேவையை நடத்தப்படும் என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை பலப்படுத்தல் மற்றும் நீதியான சமூகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சட்டம் தொடர்பில் இதன்போது மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியன இணைந்து அந்தப் பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவுளளதாகவும் அமைசசர் குறிப்பிட்டுள்ளார்.