பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம் என பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை பௌத்த சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, பாகிஸ்தானுக்கு வந்துள்ள தமக்கு வழங்கியுள்ள வரவேற்புக்கு நன்றிகளை கூறிக்கொள்வதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.