இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதான 55 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களுக்கு எதிரான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இவர்களுக்கு 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதகால ஒத்தி வைக்கப்பட்ட சாதாரண சிறை தண்டனையை விதித்த நீதிமன்றம், இவர்கள் 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக, இந்த மீனவர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.