இலங்கையில் 2021/2022 பெரும் போகத்தின் போது நஷ்டத்தை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கடந்த போகத்தில் நெல் அறுவடையில் குறைவு ஏற்பட்டிருந்தால் அதற்காக விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கத்தினால் 40 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை விவசாயிகளிடம் இருந்து நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல்லை தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.