இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர்விநியோகத்திற்கு இடையூறுகள் ஏற்படக் கூடுமென்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆறு மாதங்களுக்கு மேலாக நீர்க் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.