இலங்கையில் இன்றைய தினம் தொடக்கம் இரவு நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் நான்கு கட்டங்களாக ஒரு மணிநேர மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக பிரதேசங்கள் A, B, C, D என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி நிலைமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.