இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைப்பற்றப்பட்ட இந்திய மீனவப் படகுகள் பலவற்றை ஏலத்தில் விற்பதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட 105 படகுகள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான கடிதம் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் திணைக்களத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர், காங்கேசன்துறை, கிளிநொச்சி, தலைமன்னார், கற்பிட்டி ஆகிய இடங்களில் இந்தப் படகுகள் உள்ள நிலையில், அவற்றை அந்த இடங்களில் வைத்தே ஏலத்தில் விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு ஐந்தரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.