பஸ்களில் பயணிகளிடம் இரண்டு பிரிவுகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
பஸ்களில் ஆசனங்களில் அமர்ந்து பயணிப்போர் மற்றும் நின்றுகொண்டு பயணிப்போர் என்று இரண்டு பிரிவுகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பஸ்களில் ஆசன எண்ணிக்கையை விடவும் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும், சில பிரதேசங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆசனங்களில் அமர்ந்து பயணிப்போருக்கு ஒரு கட்டணத்தையும், நின்றுகொண்டு பயணிப்போருக்கு வேறு கட்டணமொன்றையும் அறிமுகப்படுத்த ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.