வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய சட்டப்பூர்வ வழிகள் ஊடாக ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும், மேலதிகமாக 10 ரூபாவை வழங்கும் நடைமுறையை ஏப்ரல் 30 வரையில் நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
விசேட நாணய மாற்று சலுகையின் கீழ் இதனை செயற்படுத்தியுள்ளதாக விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நாணயமாற்று விகித அடிப்படையில் வழங்கப்படும் தொகைக்கு மேலதிகமாக ஊக்கத் தொகையாக 10 ரூபா வழங்கப்படுகின்றது. ஜனவரி 31 வரையில் இதனை நடைமுறைப்படுத்த முன்னர் தீர்மானித்திருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 30 வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பணப்பரிமாற்ற செலவுக்காக 1000 ரூபாவை மேலதிகமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.