January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபுகஸ்கந்த மின்நிலையம் செயலிழக்கும் அபாயம்!

எரிபொருள் நெருக்கடியால் சபுகஸ்கந்த அனல் மின்நிலையம் இன்று பிற்பகல் முதல் செயலிழக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் சபுகஸ்கந்த மின்நிலையத்திற்கு எரிபொருளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் அந்த மின்நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படலாம் என்றும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளார்.

சபுகஸ்கந்த மின்நிலையத்தின் ஊடாக தேசிய மின் கட்டமைப்பு 165 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது. இது செயலிழந்தால் அந்த மின்சாரம் தேசியக் கட்டமைப்புக்கு கிடைக்காது போகும்.

எனினும் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் கடந்த சில தினங்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.