January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கானாவில் வெடிபொருட்களுடன் சென்ற லொரி விபத்து: பலர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் ஊரகப் பகுதியில் தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொரி மீது மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் வெடிபொருட்கள் வெடித்ததால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் இருந்து கட்டடங்கள் பல இடிந்து விழுந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் இருந்து இதுவரையில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சிரானோ பகுதியில் உள்ள மக்சாம் நிறுவனத்துக்கு சொந்தமான தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருட்களை ஏற்றிச் செல்லும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொரி மீது மோதிய வேளையில் லொரி தீப்பற்றியதாலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கானா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.