January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டன் அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை!

 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இனப்பிரச்சனைனக்கு நிரந்தமான தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியாவிடம் கேட்டுக்கொள்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியா ஒன்றாக்கிய பின்னர் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டார்கள் என்றும் அவரிடம் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இரண்டாக இருந்த நாட்டை ஒன்றாக மாற்றிய பிரித்தானியாவே தமிழர்கள் தமது பூர்வீக மண்ணில் நீடித்து நிலைத்திருக்க கூடிய நிரந்தமான தீர்வொன்றை அடைய வழிவகை செய்ய வேண்டும் எனவும், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய கொண்டிருக்கும் கரிசனை மற்றும் அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றிகளை கூறிக்கொள்வதாகவும் இரா.சம்பந்தன், அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் தெரிவித்துள்ளார்.