May 23, 2025 12:10:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரவு 11.45 மணியளவில் வைத்தியசாலையின் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து, பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவத்தால் எவருக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் அதிகாரிகளினால் ஆராயப்பட்டு வருகின்றது.